Friday, October 12, 2012

மனிதக்குரங்குகளும் மனிதர்களும் ஒரே மூதாதை விலங்கிலிருந்து கூர்ப்படைந்ததை நேரில் பார்த்தீர்களா என்ன?

நேரில் கண்டால் தான் உண்மையெனில் எந்தவொரு குற்றத்திற்கும் எவரையும் தண்டிக்க முடியாது. குற்றம் நடந்து பலமணிநேரம் ஏன் பல நாட்களிற்குப் பின் தான் புலனாய்வாளர்கள் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று அங்கு விடப்பட்டிருக்கும் தடயங்களைக் கவனமாக ஆராய்ந்து குற்றம் எவ்வாறு யாரால் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணித்துக் குற்றவாளியைப் பிடிப்பார்கள். இதில் அநேகமானவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறேன்.நேரில் பார்த்தால் மட்டுமே நம்புவீர்களெனில் பல விடயங்கள் எமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
 
அதனால் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என யாராவது சொன்னால், நீ என்ன நேரில் பார்த்தாயா? என்பது ஒரு நல்ல கேள்வியன்று. அதோடு, உங்களுக்கு அநேகமாகத் தெரிந்திருக்கும் அவர்கள் நேரில் கண்டிருக்க சாத்தியமே இல்லை என்று. அதனால் உங்களுக்கு உண்மையில் கூடிய தகவல் தேவையெனில், நீங்கள் கேட்க வேண்டியது, உனக்கு எப்படி அது தெரியும்?

 
அத்தோடு ஒரு சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளையெல்லாம் முற்று முழுதாக நம்ப முடியாது. They are very unreliable. எமது நினைவாற்றல், தற்சார்புடைய நோக்கு என்று பல பிரச்சனைகளால் நேரில் பார்த்த சாட்சிகளையெல்லாம் இப்போ நீதிமன்றங்களிலேயே கேள்விக்குள்ளாக்குகிறார்கள். மனிதக் குரங்குகளும் நாமும் ஒரு பொது மூதாதை விலங்கிலிருந்தே பரிணாமம் அடைந்துள்ளோம் என்பதற்கு நேரில் கண்ட சாட்சிகளையும் விட மிகச்சிறந்த, யாராலும் மாற்றப்பட முடியாத சில‌ ஆதாரங்களைப் பார்க்கலாமா?

அதற்கு முன் ஒன்று சொல்ல விரும்புகின்றேன்.  ஏதோ origin of species ஜ வாசித்து, அதை ஒரு புனித நூலாக, அதிலுள்ளதையெல்லாம் அப்படியே நம்பி, வேறொரு ஆய்வுகளும் செய்யாமல், அப்புத்தகத்தில் உள்ளதை மட்டுமே திரும்பத் திரும்ப இன்று மட்டும் பரிணாமத்திற்குச் சார்வாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் போல் பரிணாமம் நடந்ததை நடப்பதை ஒத்துக்கொள்பவர்களையும் பரிணாம ஆய்வாளர்களையும் Darwinists என்று சொல்பவர்களுக்காக ஒரு செய்தி. இந்தப் பதிவுகளில் நான் குறிப்பிடும் ஆதாரங்கள் எதுவுமே டார்வினுக்குத் தெரிந்திருக்காது. அக்காலத்தில் எமது மரபு ரேகையைப் பற்றியோ மரபணுக்களைப்பற்றியோ நிறவுருக்களைப் பற்றியோ எந்தவித அறிவும் இருக்கவில்லை.
 
இவ்வாதாரங்கள் எம்மெல்லோரிலும் உண்டு. என்னதான் இல்லை இல்லை என்று வாதாடினாலும் மாற்றமுடியாது. எனெனில் எமது பரிணாம வரலாறு எமது மரபுரேகையில் (genome) அப்பட்டமாகப் பதிந்துள்ளது. It's part of who we are. It's in our digital code. It's the best kind of evidence.

Image: Scientific American
 
1. எமது மரபு ரேகையிலுள்ள‌ endogenous retrovirus sequences (இந்தப் பகுதி மட்டும் பரிணாமம் என்றால் என்ன என்ற பதிவிலிருந்து எடுத்தது)

வைரஸ் என்பது ஓரு புரதக் கூட்டிற்குள் இருக்கும் nucleic acid மட்டுமே. இந்த nucleic acid ஒரு DNA ஆகவோ RNA ஆகவோ இருக்கலாம். RNA ஜக் கொண்ட virus, retro virus எனப்படும். ஒரு வைரஸ் பெருக, அதற்கு இன்னொரு உயிரியின் உடல் தேவை. ஏனெனில் வைரஸில் தன்னைத் தானே இரட்டிப்பாக்கும் சக்தி இல்லை. ஒரு ரெட்ரோவைரஸ் இன்னொரு உயிரியின் உடலில் தொற்றியதும் தனது RNA ஜ‌ DNA ஆக மாற்றி, அதை தொற்றிய உயிரியின் உயிரணுக்களிலுள்ள (cells) மரபு ரேகையில் புகுத்தும். தொற்றிய உயிரியின் உயிரணுக்களிலுள்ள DNA பிரதியெடுக்கும் போது, வைரஸ் DNA உம் பிரதியெடுக்கப்படும். இவ்வாறே தம் எண்ணிக்கையைப் பெருக்கும். Infection போன பின்னும் இந்த virus DNA அந்த உயிரியின் கட்டமைப்பிலேயே செயலிழந்திருக்கும் (called an endogenous retrovirus or ERV). இந்த ரெட்ரோவைரஸ் DNA எமது உடல் உயிரணுக்களைத் தொற்றித் தனது DNA ஜ எமது உடல் உயிரணுக்கலின் DNA கட்டமைப்பில் புகுத்தினால், எமது genome இல் ஏற்பட்ட‌ அந்த மாற்றம் எம்முடன் முடிந்துவிடும். ஆனால் அது எமது முட்டையின் அல்லது விந்தின் மரபு ரேகையில் புகுத்தினால் அந்த மாற்றம் நிரந்தரமாகிவிடும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படும். எமது மரபு ரேகையில் கிட்டத்தட்ட 8% இந்த ERV ஆல் வந்தவை. நாம் பொதுவழித்தோன்றலால் தான் வந்திருக்கின்றோமானால், என்ன எதிர்பார்க்கலாம்? பரிணாமத்தில் ஒரு மூதாதை உயிரினத்திற்கு இவ்வாறு ரெட்ரோவைரஸ் தொற்றப்பட்டிருப்பின் அவையின் மரபு ரேகையில் எந்த இடத்தில் இந்த ERV புகுத்தப்பட்டிருந்ததோ அதே இடத்தில் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த‌ மற்றைய உயிரினங்களின் DNA கட்டமைப்பிலும் காணப்பட வேண்டுமென எதிர்பார்க்கலாமா?
 
GUESS WHAT? மனிதர்களினதும் மனிதக்குரங்குகளினது மரபு ரேகையில் ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 16 ERVs ஒரே இடத்தில் உள்ளன. மனிதனின் மரபு ரேகை 3 பில்லியன் base pairs நீளமானது. ERVs 500 base pairs மட்டுமே. எப்படி அவ்வளவு நீளமான DNA கட்டமைப்பில் இவ்வளவு சிறிய ERVs மிகச் சரியாக அதே இடத்தில் இருப்பது சாத்தியம்? மனிதர்களும் மனிதக்குரங்குகளும் (chimpanzees) கிட்டத்தட்ட 5-7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரே இன மூதாதையரின் வழித்தோன்றல்கள் எனப் பரிணாமம் கூறுகின்றது. இம்மூதாதையரைத்தொற்றிய வைரஸ்கள் அவர்களின் மரபு ரேகையில் புகுத்திய ERVs உம் அதற்கு முதலே அவர்களின் (அவர்களின் மூதாதையர் மூலம்) மரபு ரேகையில் இருந்த‌ ERVs ம்மே இவை. இவற்றிற்கு வேறு பொருத்தமான விளக்கம் இல்லை. அது மட்டுமல்ல வேறு பரிணாமப் பாதையைக் கொண்ட உயிரிகளில் இதே எண்ணிக்கையான ERVs இதே இடங்களில் அவைகளின் மரபு ரேகையில் இருக்காது. பரிணாமத்தால் மட்டுமே இவற்றை விளக்க முடியும்.
 


2. Pseudo genes/ மரபணு மாற்றங்களால் முறிபட்ட/வேலைசெய்யாத மரபணுக்கள்
 
எம் மூதாதையரில் வேலை செய்த சில மரபணுக்கள் இடையில் நிகழ்ந்த சில மரபணு மாற்றங்களால் (mutations) எம்மில் வேலை செய்யாமல் உள்ளன. அந்த மரபணுக்களுக்கான nucleotide நிரலொழுங்கு எமது மரபு ரேகையில் இருக்கிறது, ஆனால் அதில் நடந்த மரபணு மாற்றங்களால் அம்மரபணு அது உருவாக்கவேண்டிய புரதத்தை உருவாக்கும் சக்தியை இழந்துவிட்டது. அவ்வாறு எம்மிலிருக்கும் உடைந்த மரபணுவிற்கு ஒரு உதாரணம் L-gulano-γ-lactone oxidase gene (GULO gene). இந்த மரபணு வைட்டமின் C உருவாக்குவதற்கு அவசியமானது. அநேகமாக எல்லா விலங்குகளிலும் இந்த மரபணு இயங்கக்கூடிய வகையிலேயே உள்ளது. கினியாப் பன்றியிலும் நாம் உட்பட உயர் விலங்கினங்களிலும் (primates) மரபணு மாற்றங்களால் முறிந்துள்ளது. ஆனால் கினியாப் பன்றிகளில் நடந்த மரபணு மாற்றங்கள் உயர் விலங்கினங்களில் நடந்த மரபணு மாற்றங்களிலிருந்து மாறுபட்டது. உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான வைட்டமின் C ஜ இருவாக்கும் மரபணுவில் மாற்றம் வந்த சிரிது காலத்திலேயே எமது மூதாதையர் அழிந்திருக்கலாம். ஆனால் அவ்விலங்குகளின் சாப்பாட்டில் இலைகள், கனிகள் அதிகமிருந்ததால் அவற்றிலிருந்து பெறப்பட்ட வைட்டமின்  C ஆல் உயிர் வாழ முடிந்தது. இன்றும் நாம் சாப்பாட்டின் மூலமே வைட்டமின் C ஜப் பெற முடியும்.   உயர்விலங்கினங்களில் உள்ள GULO மரபணுவின் nucleotide நிரலொழுங்கில், மனித GULO மரபணுவின் nucleotide நிரலொழுங்குடன் அதிகம் ஒத்திருப்பது மனிதக் குரங்கினதுடனேயே. அடுத்து ஒருங்குட்டான் குரங்கினதுடனும் பின் macaque குரங்கினதுடனும் எமது  GULO மரபணுவின் nucleotide நிரலொழுங்கு ஒத்துள்ளது. பரிணாமப்படி எமது அனுமானங்கள் சரியாயின் இவ்வாறே நிகழ்ந்திருக்கும். 
 
 


இன்னொரு உதாரணம் steroid 21-hydroxylase என்ற மரபணு. இது எமது உடலில் சில அத்தியாவசியமான இயக்க ஊக்கிகளை (steroids) ஜத் தயாரிக்க அவசியமான நொதியத்திற்குப் (enzyme) பொறுப்பானது. இம்மரபணுவுன் இரு பிரதிகள் எம்மில் உண்டு. அதில் ஒன்று வேலை செய்யும். மற்றையது உடைந்த பிரதி (ஒழுங்காக வேலை செய்யும் பிரதியும் உடைந்து விட்டால் congenital adrenal hyperplasia எனும் மிகவும் அரிதான, ஆபத்தான நோய் உண்டாகும்). மனிதக் குரங்குகளிலும் இருக்கும் இரு பிரதிகளில் ஒன்றே வெலை செய்யும். மற்றையது உடைந்துவிட்டது. எம்மிலும் மனிதக் குரங்குகளிலும் உடைந்த பிரதிக்கு இந்த மரபணுவின் nucleotide நிரலொழுங்கில் இருந்து அழிக்கப்பட்ட 8 nucleotides தான் காரணம் (called a deletion mutation). இந்த மரபணு மாற்றம் எமது பொது மூதாதை விலங்கிலிருந்து எமக்குக் கடத்தப்பட்டதால் மட்டுமே எம்மிரு இனங்களுக்குமிடையே ஒரே மாதிரியான மரபணு மாற்றத்துடன் இந்த உடைந்த மரபணு காணப்படுகிறது.
இந்த மாதிரிப் பல உடைந்த மரபணுக்கள் மனிதருக்கும் மனிதக் குரங்குகளுக்குமிடையில் ஒத்துள்ளன. இம்மரபணுக்களில் உள்ள பிழைகள் நம்மிரு இனங்களுக்கும் பொதுவானவை அல்லது கூடியளவு ஒத்திருக்கும்.இந்த மரபணுக்கள் எமது பரிணாம வரலாற்று எச்சங்களே. இவற்றால் எமக்கு எந்தப்பயனும் இல்லை.
 
இன்னொரு பிரமாதமான ஆதாரத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

9 comments:

Anonymous said...

Nice to read your postings on evolution. Very interesting and informative. Thank you!

VR

Thekkikattan|தெகா said...

Great! Besides those fossil evidences working at genetical level can substantiate our existing knowledge about our common ancestors. Thanks for the post and time!

நம்பள்கி said...

நீளத்தைக் குறையுங்கள்; பகுதிகளாகப் போடுங்கள். படித்து அசை போட நேரம் வேண்டும்..முக்கியமாக வீடியோக்களை!

குட்டிபிசாசு said...

தெளிவான விளக்கம். தெரிந்து கொண்டேன்.

Anonymous said...

அருமையான பதிவு, இன்னம் கொஞ்சம் எளிமையாக்கலாம் .. ஒன்னும் தெரியாத மக்குக்கு கூட எதோ கொஞ்சமாவது புரியனும் என எழுதினால் தான் பலருக்கும் சென்றடையும் .. தவறாகக் கூறியிருந்தால் மன்னிக்க ..

Unknown said...

வணக்கம் சகோ,

நல்ல பதிவு. எவ்வளவுதான் எளிமையாக பதிவிட்டாலும் எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள மறுப்பார்கள். அது அவர்களின் குணம்,ஒன்றை உருவாக்க படைப்பாளி என்று அவசியம் வேண்டும் அந்த படைப்பவனை வணங்க வேண்டும்,அவனுக்கு சடங்குகள் செய்ய வேண்டும்,அவனுக்கு ஆலயங்கள் பல உருவாக்க வேண்டும்,அதை வைத்து பணம் பதவி மற்றும் இதர வகையராக்கள் பெருகி கூட்டத்தை சேர்க்க வேண்டும்,ஒரு கூட்டம் அதற்கு ஒரு தலைவன் வந்த பிறகு அந்த தலைவனுக்குப் போட்டியாக இன்னொரு தலைவனை உருவாக்க சதி நடக்கும், முன்னாள் தலைவன் வணங்கியதை நாம் எப்படி வணங்குவது? தலைவனே போட்டியாக இருக்கும் போது அவன் வணங்கிய கடவுள் மட்டும் நமக்கு எதற்கு? உடனே கடவுளையும் மாற்ற சதி நடக்கும்,புதிய கடவுள், புதிய ஆலயம், புதிய வணக்கமுறை,புதிய சடங்குகள்,புதிய வேதம், புதிய இறைத்தூதர். ஆஹா..இதுவல்லவோ உண்மயான‌ பரிணாமம் நீங்கள் சொல்வதெல்லாம் பெயர் தாங்கிப் பரிணாமம்!!!

இனியவன்...

Anonymous said...

Very informative post. Thanks for taking the time to share your view with us.

Anonymous said...

This is a good blog message, I will keep the post in my mind. If you can add more video and pictures can be much better. Because they help much clear understanding. :) thanks Cavalieri.

ரசிகன் said...

சிறந்த பதிவு..
பல பிரயோசனமான விடயங்களை அறிந்து கொண்டேன்.
மேலும் தொடர வாழ்த்துக்கள்..